நீதியை நிலைநாட்ட தவறியுள்ள இலங்கை

Report Print Ajith Ajith in அரசியல்

திருகோணமலையில் 2006ஆம் ஆண்டு ஐந்து மாணவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதியை நிலைநாட்ட இலங்கை தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சர்வதேச மன்னிப்புச்சபை இந்தக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.

ராகிஹர் மனோகரன் மற்றும் நான்கு மாணவர்கள் 2006ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் திகதியன்று இலங்கையின் படையினரால் கொல்லப்பட்டனர்.

இந்த கொலைகள் தொடர்பில் பொலிஸாரின் விசாரணை மற்றும் ஜனாதிபதி விசாரணைகள் இடம்பெற்றபோதும் இதுவரை பொறுப்புக்கூறல் எதுவும் இடம்பெறவில்லை.

இந்தநிலையில் குறித்த மாணவர்களின் கொலைகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு நீதி வழங்கப்பட வேண்டும் என்று மன்னிப்புசபை இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Latest Offers

loading...