மஹிந்த ராஜபக்சவுக்கு பௌத்த தேரரின் எதிர்பாராத ஆசீர்வாதம்

Report Print Ajith Ajith in அரசியல்

வேறு நாடுகளுக்கு செல்லும் இலங்கையர்கள் தம்மை இலங்கையர்கள் என்று இனங்காட்ட முடியாதுள்ளதாக பௌத்த மதகுரு, மஹிந்த ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளார்.

கோட்டே சங்கசபாவின் மகாநாயக்கர் இட்டிப்பனே தம்மலங்கார தேரர், தம்மிடம் ஆசீர்வாதம் பெற இன்று வந்த மஹிந்த ராஜபக்சவிடம் தமது அதிருப்தியை இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்.

இலங்கையர்கள் பெறுமதியான வரலாறுகளை கொண்டிருக்கிறார்கள் இந்தநிலையில் அண்மையில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அநாகரிக சம்பவங்கள் இந்த வரலாற்றை கொச்சைப்படுத்தியுள்ளன.

எல்லாள மன்னனை எவரும் துன்புறுத்தக்கூடாது என்று உத்தரவிட்ட துட்டகைமுனு மன்னன், எல்லாளனுக்காக மரியாதை தூபியை கட்டிய வரலாற்றை இலங்கை கொண்டிருக்கிறது.

இவ்வாறான பெருமைக்கொண்ட இலங்கையின், நாடாளுமன்றத்தில் அண்மையில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள், அநாகரிக சம்பவங்கள் என்றும் தேரர் குறிப்பிட்டார்.

இந்தநிலையில் இளம்பிக்குமார், பல்வேறு பிரிவுகளாக செயற்படுவதையும் தேரர் குற்றம் கூறியுள்ளார்.

எனினும் சபாநாயகரின் செயற்பாடுகளே நாடாளுமன்ற சம்பவங்களுக்கான காரணம் என்று தேரரிடம் மஹிந்த பதில் வழங்கியுள்ளார்.

Latest Offers