ஐக்கிய தேசிய கட்சியே யார் பிரதமர் வேட்பாளர் என்பதை தீர்மானிக்கும்! இம்ரான் மஹ்ரூப்

Report Print Abdulsalam Yaseem in அரசியல்

பொதுத் தேர்தல் ஒன்று ஏற்பாட்டால் ஐக்கிய தேசிய கட்சியே யார் பிரதமர் வேட்பாளர் என்பதை தீர்மானிக்கும். இந்த விடயத்தில் ஏனைய கட்சி காரர்களுக்கு எமது கட்சி தொடர்பில் கருத்துச் சொல்வதற்கு எந்தவித தகுதியும் கிடையாது என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

மூதூர் சீ.சீ.டி.எப் முன்பள்ளிப் பாடசாலை மாணவர்களின் பிரியாவிடை நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது, குறித்த நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

எமது எதிர் தரப்பினர் விரைவாக பொதுத் தேர்தல் நடாத்தப்பட வேண்டுமென பரவலாக ஆர்ப்பாட்டங்களை நடாத்தி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த கோசங்களும் ஆர்ப்பாட்டங்களும் நகைப்புக்குரியதாக உள்ளது. இந்த ஆர்ப்பாட்டங்கள் ஜனாதிபதி தேர்தலை விரைவாக நடாத்துங்கள் என்றிருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை ஜனாதிபதியாக்குவதற்கு நாம் இரவு, பகல் என்றும் மழை, வெள்ளமென்று பாராமல் அவருக்கு ஆதாரவாக பிரச்சாரங்களை மேற்கொண்டு அவரை ஜனாதிபதியாக்கினோம்.

இதில் சிறுபான்மை மக்களின் பங்களிப்பு அளப்பரியது. இந்த விடயங்களையெல்லாம் ஜனாதிபதி மறந்த ஒருவராக கடந்த காலங்களில் செயற்பட்டு விட்டு இப்போது அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாகவும், தமிழ் தேசிய கூட்டமைப்பை பேச்சுவார்த்தைக்கு வருமாறும் அறைகூவல் விடுப்பது அவரது மாறுபாட்டு குணத்தை காட்டுகின்றது.

இந்த விடயங்களை அவர் நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்படுவாதற்கு முன்னர் கூறாமல் தற்போது கூறுவதானது அவரது அரசியல் தந்திரத்தை காட்டுகின்றது. இந்த விடங்கள் மக்களுக்கு நன்றாக தெரியும்.

ஜனாதிபதி தூங்கும் முன் ஒரு கருத்தையும், தூங்கி எலும்பும் போது மற்றுமொரு கருத்தையும் தெரிவித்து வருகின்றார். இந்த கருத்துக்களை அவர் தெரிவிக்கும் போது அதிகமானவர்கள் அவரை ஒரு ஜோக்கராகவே பார்க்கின்றனர்.

இவ்வாறு நிலையான கருத்துக்கள் இல்லாத, முடிவெடுப்பதற்கு திராணியற்ற ஜனாதிபதிக்கு எதிர் காலத்தில் ஜனாபதி தேர்தலொன்று ஏற்பட்டால் நல்லதொரு பாடத்தை மக்கள் புகட்டுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

Latest Offers