தீர்ப்பின் பாரதூரம் என்ன? மைத்திரியின் திடீர் சந்திப்பின் இரகசியம்!

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்பங்கள் குறித்து விசேடமாக ஆராய்வதற்கும், கலந்துரையாடுவதற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அழைப்பு விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு விசாரணைகளும் நடந்து முடிந்துள்ளன. எனினும் நாடாளுமன்றக் கலைப்புக்கான இடைக்காலத் தடை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டிருக்கிறது.

நாளை அல்லது நாளை மறுநாள் தீர்ப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில் நாளை இரவு 7 மணிக்கு ஐக்கிய மக்கள் சுதந்தி முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் ஜனாதிபதி சந்திக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தீர்ப்பு எவ்வாறு அமையும் என்பது தொடர்பில் பேசிய ஜனாதிபதி நீதிமன்றம் எவ்வகையான தீர்ப்பினை வழங்கினாலும் அதற்கு ஏற்றால் போல செயற்படுவேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் நாளை நடக்கும் இவ் விசேட சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Latest Offers