நீதிமன்றத் தீர்ப்பினை விரைவாக வெளியிடுவதை எதிர்பார்க்கும் மைத்திரி! நாளை விசேட கோரிக்கை

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

நீதிமன்றத் தீர்ப்பை துரிதமாக வெளியிடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்தமையானது அரசியலமைப்புக்கு முரணானது என நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றமும் இடைக்காலத் தடை விதித்திருந்தது.

எனினும் வழக்கு விசாரணைகள் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு வரும் 12ஆம் திகதி நாளை மறுநாள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நாடாளுமன்ற கலைப்பு தொடர்பான நீதிமன்றத்தின் தீர்ப்பினை விரைவாக வெளியிடுமாறு சட்டமா அதிபரூடாக பிரதமர நீதியரசரிடம் ஜனாதிபதி கோரவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாளை மாலை ஏழு மணிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்து கலந்துரையாடவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீர்ப்பின் பாரதூரத் தன்மை மற்றும், அதற்குப் பின்னர் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும் இதன் போது ஆராயப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Offers

loading...