பிரச்சினைகளை மைத்திரி தீர்க்காது விட்டால் அவருக்கு விளங்கும் பாஷையில் சொல்லப்படும்! மிரட்டும் உறுப்பினர்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலையினை ஜனாதிபதி தீர்க்காது போனால் அவருக்கு விளங்கும் பாஷையில் சொல்லப்படும் என ஐக்கிய தேசிய கட்சி அறிவித்திருக்கிறார்.

ஜக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மத்தும பண்டார இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசும் போது,

ஜனாதிபதிக்கு விளங்கும் பாஷையில் கூறுவதற்கான நடவடிக்கைகளை எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கவுள்ளோம்.

நாடாளுமன்றத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு செவிசாய்க்காது போனால், நீதிமன்றம் வெளியிடும் தீர்மானத்துக்கும் கட்டுப்படாது போனால் அடுத்து ஜனாதிபதிக்கு விளங்கும் பாஷையில் கூறுவதற்கான நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளோம்.

உயர் நீதிமன்றத்தின் இறுதித் தீர்மானம் வரும் வரையில் எதிர்பார்த்துள்ளோம். ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக போராட்டம் முன்னெடுத்த உலக நாடுகள் அனைத்திலும் மக்கள் வீதிக்கு இறங்கியுள்ளனர். அவ்வாறான ஒரு நடவடிக்கையையே நாம் பயன்படுத்தவுள்ளோம் என்றார்.

முன்னதாக பேசிய சஜித் பிரேமதாச, ஜனநாயகத்தை காக்கவும், நாட்டை சீரழிவிலிருந்து காக்கவும், பெரும் போராட்டத்தை ஐக்கிய தேசிய கட்சி முன்னெடுக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, நீதிமன்றத் தீர்ப்பி இந்த வாரம் வெள்ளிக்கிழமைக்கு முன்னர் வெளிவரும் என்றும் அதற்குப் பின்னர் பெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க தீர்மானித்திருப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...