சபையில் நிறைவேற்றப்பட்ட ஏறாவூர்ப்பற்று பிரதேசசபையின் வரவுசெலவுத்திட்டம்

Report Print Kumar in அரசியல்

மட்டக்களப்பு - ஏறாவூர்ப்பற்று பிரதேசசபையின் வரவுசெலவுத்திட்டம் சபையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஏறாவூர்ப்பற்று பிரதேசசபையின் அமர்வு இன்று காலை தவிசாளர் நா.கதிர்வேலு தலைமையில் ஆரம்பமானது.

கடந்த 2019ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம் தவிசாளரினால் முன்வைக்கப்பட்டதை தொடர்ந்து அது தொடர்பான விவாதகங்கள் நடைபெற்றன.

இதன்போது, உறுப்பினர்களுக்கு அதிகளவு நிதியொதுக்கீடு செய்ய வேண்டும் என்ற வகையில் நடைபெற்ற கருத்து மோதல்கள் காரணமாக சபை ஒரு மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் தொடர்ந்தது.

வரவுசெலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பு நடாத்தப்பட்டபோது அதற்கு ஆதரவாக 26 உறுப்பினர்கள் வாக்களித்துடன் இருவர் எதிராக வாக்களித்தனர்.

இதேவேளை, மூன்று பேர் சபைக்கு சமூகமளிக்கவில்லை. இந்நிலையில் 2019ஆம் ஆண்டுக்கான ஏறாவூர்ப்பற்று பிரதேசபையின் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Latest Offers