அந்த ஒரே ஒரு சொல்லினால் மகிந்தவை காட்டிக் கொடுத்த மைத்திரி! குற்றவாளியானார் சிறிசேன

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உண்மைகளை ஒப்புக் கொண்டதன் மூலமாக மகிந்த ராஜபக்சவை காட்டிக் கொடுத்துள்ளார் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியினால் பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச தன்னுடைய பெரும்பான்மையை நிரூபிக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களை அமைச்சர்களாக நியமிக்கவும், ஆதரவினை பெறவும் கோடிக்கணக்கில் பேரம் பேசப்பட்டது என்றும், எனினும், கோடிகளை அதிகளவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்பார்த்தனர்.

இதனால் மகிந்த ராஜபக்சவினால் தனது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பினை அக்கட்சி ஏற்பாடு செய்திருந்தது. இது தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்,

19 ஆம் திருத்தத்துக்கு அமைய ஜனாதிபதியினால் நான்கரை ஆண்டுகளுக்கு நாடாளுமன்றத்தை கலைக்க முடியாது. ஆனால் கடந்த வாரம் ஜனாதிபதி கூறியது என்ன? ஒரு வாரத்தில் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பதாக கூறினார்.

ஆனால் இன்று அந்த வாரம் முடிகின்றது. இப்போது நீதிமன்ற தீர்ப்பு வரையில் காத்திருக்க வேண்டும் என கூறுகின்றார். ஏன் இவர் நிமிடத்துக்கு நிமிடம் மாறி மாறி பேசுகின்றார். ஒரு கருத்தில் அவர் உறுதியாக இருப்பதில்லை என்பதை சகல சந்தர்ப்பத்திலும் அவர் நிரூபித்து விட்டார்.

அதேபோல் இன்று சபாநாயகர் மீது குற்றம் சுமத்தி வருகின்றனர். ஆனால் சபாநாயகர் மீது எந்த தவறும் இல்லை. நவம்பர் 14 ஆம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்பது ஜனாதிபதியின் தீர்மானம். மாறாக சபாநாயகர் தீர்மானம் அல்ல.

பொய்யான காரணிகளை கூறி இவர்கள் அனைவரும் நாட்டினை நாசமாக்கி வருகின்றனர். அன்று நீதிமன்றத்தை நாடுங்கள் என சவால் விருத்தவர்கள் இன்று நீதிமன்ற தீர்ப்பையே ஏற்றுகொள்ள மாறுகின்றனர்.

இதேவேளை, மகிந்தவின் அரசாங்கத்திற்கு பெரும்பான்மையை நிரூபிக்க அமைச்சர்களுக்கு கோடிக்கணக்கில் விலை பேசப்பட்டது, விலையை அதிகரித்தமையே மகிந்தவினால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது போனது என்பதை கூறியதன் மூலம் தான் குற்றவாளி என்பதை ஜனாதிபதி ஒப்புக்கொண்டதுடன் மஹிந்தவையும் காட்டிக் கொடுத்துவிட்டார் என்றார்.

Latest Offers

loading...