ரணிலை கைவிடுகின்றதா கூட்டமைப்பு?

Report Print Murali Murali in அரசியல்

ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்க கோரி கொண்டு வரப்படும் நப்பிக்கை பிரேரணையை ஆதரிப்பது தொடர்பில் இதுவரையிலும் தீர்மானிக்கவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இதனை தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், நாளை காலை இடம்பெறும் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடி தீர்மானிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து நாடாளுமன்றில் கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கை பிரேரணைக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், குறித்த பிரேரணைக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கப் போவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ரணில் விக்ரமசிங்கவைப் பிரதமராக நியமிக்குமாறு கோரி ஐக்கிய தேசியக் கட்சி நாளை மறு தினம் நாடாளுமன்றில் நம்பிக்கை பிரேரணை ஒன்றை கொண்டு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...