தான் தோன்றித்தனமாக செயற்பட வேண்டாம்! விளைவுகள் பாரதூரமாகும்: மைத்திரிக்கு எச்சரிக்கை

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

நாட்டில் அரசாங்கம் என்ற ஒன்று இல்லாத சமயத்தில் தான்தோன்றித்தனமாக செயற்படுவது எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எச்சரித்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய அவர்,

அரசியல் கருத்து வேறுபாடுகள் பொருளாதார விடயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறந்த தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும்.

தேசிய சேமிப்பு வங்கி பிணைமுறிகளை அரச திரைசேறியில் வைக்க தேசிய அரசாங்கத்தில் அனுமதி கோரியது. ஆனால் நாங்கள் அதற்கு அனுமதி வழங்கவில்லை. அவ்வாறு வழங்கியிருந்தால் 05 வருடத்தத்திற்கு பிறகு இக்கட்டான நிலைமைக்கு பொருளாதார முகாமைத்துவ செயற்பாடுகள் தள்ளப்பட்டிருக்கும்.

ஆனால் அன்று நாங்கள் எவ்விடயத்தை எதிர்த்தோமோ இன்று அவைகளே இடம்பெறுகின்றது. அந்நிய செலாவணியை தக்கவைத்துக் கொள்வதாக குறிப்பிட்டுக் கொண்டு தேசிய சேமிப்பு வங்கி 750 மில்லியன் அமெரிக்க டொலர் பினைமுறியினை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளமை முற்றிலும் முறைகேடானது.

நாட்டில் அரசாங்கம் என்ற ஒன்று இல்லாத சமயத்தில் தான்தோன்றித்தனமாக செயற்படுவது எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என்றார்.

Latest Offers

loading...