வரலாற்றையே மாற்றப்போகும் நீதிமன்றின் தீர்ப்பு!

Report Print Murali Murali in அரசியல்

நாடாளுமன்றை கலைத்து வர்த்தமானி வெளியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான நீதிமன்றின் தீர்ப்பு வரலாற்றை மாற்றக் கூடியது என பிரித்தானியா தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டவுரிஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார். அந்த பதிவில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“ஒருமுன்னாள் சட்ட மாணவன் என்ற அடிப்படையில் நான் தீர்ப்பை அறிவதற்காக காத்திருக்கின்றேன். இந்த தீர்ப்பு வரலாற்றை மாற்றக்கூடிய ஒரு தீர்ப்பாக அமையும்.

இலங்கையின் சட்டம் பயிலும் மாணவர்கள் பல தலைமுறைக்கு இந்த தீர்ப்பு குறித்து கற்பார்கள் என பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டவுரிஸ் தனது டுவிட்டர் பதிவில் மேலும் கூறியுள்ளார்.

Latest Offers

loading...