அன்று என்னை துரோகி என்றார்கள்: இன்று நடப்பதைப் பாருங்கள்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

இன்றைய அரசியல் சூழ்நிலை தொடர்பாக நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் தெரிவித்திருந்தேன். ஆனால் என்னை கட்சிக்குள் இருந்தவர்கள் துரோகி என்றனர் என்று குறிப்பிட்டுள்ளார் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க.

அஸ்கிரி மற்றும் மல்வத்து தேரர்களை சந்தித்ததன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

ஜனாதிபதித் தேர்தலுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் அன்றி, இன்னொருவரை பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டாம் என்றேன். பொது வேட்பாளராக இன்னொருவரை நியமிப்பதன் மூலம், ஐக்கிய தேசியக் கட்சிக்கு எந்தவொரு பலனும் ஏற்படாது என்றேன்.

என்னுடைய இந்தக் கருத்தினைக் கேட்டவர்கள் என்னை துரோகியாக அடையாளப்படுத்தினார்கள். குறிப்பாக மகிந்த ராஜபக்ஸவுடன் இணைந்து சூழ்ச்சி செய்வதாகக் குற்றம் சுமத்தி, என்னை கட்சியிலிருந்து விலகிச் செல்லும் நிலைமைக்கும் தள்ளினார்கள்.

அப்போது நான் கூறியதை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. இன்று என்ன நடந்துள்ளது? நான்கு வருடங்களுக்குப் பின்னர் நான் கூறியது அவ்வாறே இடம்பெற்றுள்ளது என்றார்.

Latest Offers

loading...