அடுத்த கட்ட நடவடிக்கை என்ன..? மைத்திரி - மகிந்த இரண்டு மணி நேரம் பேச்சு

Report Print Murali Murali in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு இடையில் முக்கியமான பேச்சுவார்த்தை ஒன்று ஜனாதிபதியின் இல்லத்தில் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உட்பட அனைத்து தோழமைக் கட்சிகளையும் ஒன்றிணைந்து அரசியல் கூட்டணி அமைப்பது தொடர்பில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

உயர்நீதிமன்ற தீர்ப்பு, அதை மையப்படுத்திய அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் சம்பந்தமாக இதன்போது இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக தீவிரமாக ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன், ஜனாதிபதிக்கு எதிராக ஐக்கிய தேசியக்கட்சி கொழும்பில் நடத்தவுள்ள போராட்டம் சம்பந்தமாகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் போராட்டம் நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசியல் கூட்டணி தொடர்பில் ஆராய்வதற்காக விசேட குழுவொன்றும் இந்த சந்திப்பின் போது அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான தினேஸ் குணவர்தன, விமல்வீரவன்ஸ, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில உட்பட சுதந்திரக்கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Latest Offers

loading...