மகிந்தவிடம் கோடிகள் கேட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்! அகற்றப்பட்டது மைத்திரியின் சர்ச்சைக்குரிய காணொளி?

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

கொழும்பு அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்திய ஜனாதிபதி தெரிவித்த கருத்து தொடர்பான காணொளி ஒன்று நீக்கப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகிந்த ராஜபக்ஸவினால் பெரும்பான்மையை காண்பிக்க முடியாமல் போனமைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் விலை அதிகமானதே காரணம் என குறிப்பிட்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவுவதற்கு 500 மில்லியன்வரை கோரினர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

ஜனாதிபதியின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், எதிர்க் கட்சிகள் இது குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்றும், மைத்திரிபால சிறிசேன மகிந்த ராஜபக்சவை காட்டிக் கொடுத்தது மட்டுமல்லாது, தான் குற்றவாளி என்பதையும் ஒப்புக் கொண்டுள்ளார் என்றும் குறிப்பிட்டன.

இந்நிலையில், குறித்த காணொளியானது ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு கொடுத்த அழுத்ததினால் கொழும்பு ஊடகமொன்று அகற்றியுள்ளது என்று கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கொழும்பு டெலிகிராவ் குறிப்பிடுகையில், குறித்த ஊடக நிறுவனத்தின் முகப் புத்தகத்திலிருந்து அகற்றப்பட்டு அதற்கு பதிலாக பதில் சிறிய புதிய காணொளி ஒன்று காணப்படுகின்றது எனவும் அதில் குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய கருத்து காணப்படவில்லை.

முன்னாள் மகாராஜா நிறுவன பணியாளர் தர்மசிறி பண்டார ஏக்கநாயக்க என்பவரின் தலைமையிலான ஜனாதிபதி ஊடகப்பிரிவின் கடும் அழுத்தத்தை தொடர்ந்தே குறிப்பிட்ட காணொளி அகற்ற ஊடகத்தின் ஆசிரிய பீடம் தீர்மானித்தது. எனினும் குறிப்பிட்ட நிறுவனத்தின் யூடியுப்பில் அந்த வீடியோ தொடர்ந்தும் காணப்படுகின்றது என்றும் கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது.

ஒக்டோபர் 26ஆம் திகதி ஜனாதிபதி எடுத்த அரசியல் முடிவும், நாடாளுமன்றக் கலைப்பும் இலங்கை அரசியலை குழப்பியிருக்கிறது. தான் நியமித்த பிரதமர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் மகிந்த ராஜபக்சவினால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. இது தொடர்பாக பேசிய மைத்திரிபால சிறிசேன, பல மில்லியன்களை கோரினர் என்றும். அது முடியாமல் போனது மகிந்தவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்தக் கருத்து சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்புகள் எழுப்பியிருந்தன. நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலஞ்சம் கோரியமை குறித்து உரிய அதிகாரிகளிடம் முறையிடாதமைக்காக ஜனாதிபதிக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறையிடவேண்டும் என்றும் விமர்சனங்கள் எழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...