அரசியல் நெருக்கடிக்கு உடனடியாக தீர்வு காணுங்கள்! மீண்டும் அமெரிக்கா வலிறுத்தல்

Report Print Murali Murali in அரசியல்

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு அரசமைப்பின் பிரகாரம் விரைவில் தீர்வுகாணப்படவேண்டும் என்று அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எலைனா டெப்பிளிட்ஸ் இதனை தெரிவித்துள்ளார். கண்டிக்கு இன்று விஜயம் மேற்கொண்ட அவர் அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசிபெற்றார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலை குறித்தும் இதன்போது பேசப்பட்டுள்ளது. அத்துடன், தலதாமாளிகைக்கு சென்று ஆன்மீக வழிபாட்டிலும் ஈடுபட்டனர். இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,

“இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி துரிதமாக அரசமைப்பின் பிரகாரம் தீர்க்கப்படவேண்டும். அந்த சந்தர்ப்பத்துக்காக காத்திருக்கின்றோம். அதன் பிறகே ஏனைய விடயங்கள் சம்பந்தமாக குறிப்பிடமுடியும்.

இலங்கையில் தற்போது காணப்படும் அரசியல் நெருக்கடிகளுக்கு துரிதமாக தீர்வினைக் காணலாம் என தான் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையினதும் இலங்கை மக்களினதும் நட்பு நாடு என்ற வகையில் முற்றிலும் சட்டரீதியான அரசியலமைப்புக்குட்பட்ட ஜனநாயக நடைமுறைகைள மதிப்பதனை உறுதி செய்ய விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் அனைத்து இலங்கையர்களினதும் முழுமையான நம்பிக்கையை கொண்ட அரசாங்கம் ஒன்று காணப்படுவதனை உறுதிசெய்ய விரும்புவதாகவும் அமெரிக்க தூதுவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...