ரணில் - சஜித்? ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் இவரே!

Report Print Murali Murali in அரசியல்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்தப் போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின்பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

பொது வேட்பாளர் வேண்டாம் என ஐக்கிய தேசியக் கட்சி தெளிவான தீர்மானம் ஒன்றுக்கு வந்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் அதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“அடுத்த தேர்தலில் நாம் தீர்மானம் ஒன்றை எடுப்போம். உங்களுக்கு விருப்பமான தீர்மானம் ஒன்றை நாம் எடுப்போம்.

யார்? அந்த வேட்பாளர் என்று கூறமுடியாது. எனினும், நான் என்ன சொல்லவந்தேன் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டார இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“ஐக்கிய தேசியக் கட்சியை யாரும் பிளவுப்படுத்தவில்லை. ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, கரு ஜயசூரிய உள்ளிட்ட அனைவரும் கட்சியை ஒன்று சேர்க்கவே பாடுபடுகின்றனர்.

நீண்டகாலம் செல்வதற்கு முன்னர் பொறுப்பேற்றுக்கொண்டு வெற்றிபெற்று நாட்டை கட்டியெழுப்புவதாக சஜித் கூறியுள்ளார். அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராகவே இருப்பார்.

அவரே பொது வேட்பாளர். ஐக்கிய தேசிய முன்னணியில் இருக்கும் அனைவரும் விருப்பம் தெரிவிக்கும் நபராக அவர் இருப்பார்” என பாலித்த ரங்கே பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...