யானை - புலிகளின் உடன்படிக்கை அம்பலத்திற்கு வரும்!

Report Print Murali Murali in அரசியல்

யானை மற்றும் புலிகள் கூட்டணி செய்துகொண்ட உடன்படிக்கை நாளை மறுதினம் நாடாளுமன்றில் வெளிப்படுத்தப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “பிரபாகரனால் செய்ய முடியாத பல விடயங்களை இன்று சுமந்திரன் செய்து வருகின்றார்.

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை பயன்படுத்தி மேலும் பல விடயங்களை சுமந்திரன் செய்து முடிக்கப்பார்க்கின்றார்.

இந்நிலையில், சுமந்திரனின் பல கொள்கைகளுக்கு ஐக்கிய தேசிய கட்சி இணக்கம் தெரிவித்துள்ளது. இதற்கான ஆதரவினை நாளை மறுதினம் நாடாளுமன்றத்தில் காணலாம்.

அத்துடன், நாட்டுக்கு எதிரான வகையில் அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்ள யானை - புலிகள் கூட்டணி செய்துகொண்ட உடன்படிக்கை நாடாளுமன்றில் வெளிப்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers