இறுதித் தீர்ப்பு வழங்கும் தினம் குறித்து ரணில் கசிய விட்ட தகவல்!

Report Print Vethu Vethu in அரசியல்

எதிர்வரும் 13ஆம் திகதி நடத்தப்படவிருந்த ஐக்கிய தேசிய கட்சியின் எதிர்ப்பு பேரணியை பிற்போடுவதற்கு ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளது.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வழங்கப்பட்டதன் பின்னர் அதனை நடத்துவதாக ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதற்கமைய நீதினமன்றத்தின் தீர்ப்பு வழங்கும் திகதி குறித்து அவர் ரணில் துப்பு வழங்கியுள்ளார் என்றே கூறப்படுகின்றது.

“நாளை (இன்று) உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் இந்த வாரத்தின் புதன்கிழமை அல்லது வெளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என எங்கள் சட்டதரணிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் சிவில் அமைப்புகளுடன் கலந்துரையாடல் மேற்கொண்டு, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் இந்த பேரணியை நடத்த தீர்மானித்துள்ளோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அலரி மாளிகையில் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களை அழைத்து உறையாற்றும் போது அவர் இதனை கூறியுள்ளார்.