தென்னிலங்கையில் பலருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ள மஹிந்தவின் தீர்மானம்!

Report Print Vethu Vethu in அரசியல்

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ராஜபக்ஷ ரெஜிமென்டின் பலரை களமிறங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி ராஜபக்சவின் உறவினர்கள் பலரை நாடாளுமன்றத்திற்குள் நுழைப்பதற்கு மஹிந்த தீர்மானித்துள்ளார்.

நாமல் ராஜபக்சவை பொதுஜன பெரமுனவின் தலைவராக முன்கொண்டு வருவதற்கும், அதற்கு தடைகளாக கருதப்படுகின்ற தரப்பினரை அரசியலில் இருந்து துரத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதற்கமைய மாத்தறை மாவட்டத்தின் ராஜபக்ச குடும்பத்தின், மஹிந்த ராஜபக்சவுக்கு மிகவும் நெருக்கமான உறவினரின் மகன் ஒருவர் இதுவரையிலும் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார்.

இந்நிலையில் அவரது வரவிற்கு மாத்தறை மாவட்டத்தின் முன்னணி அரசியல்வாதிகள் பாரிய எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

ராஜபக்ச குடும்ப அரசியலுக்குள் சிக்காத மாவட்டமான மாத்தறை மாவட்டம் தற்போது சிக்க ஆரம்பத்துள்ளமையினால் பாரிய எதிர்ப்புகள் வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது