மஹிந்தவுக்கு இன்று காத்திருக்கும் பேரதிர்ச்சி!

Report Print Vethu Vethu in அரசியல்

நீதிமன்ற தீர்ப்பு சாதகமான வந்தாலும் மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவி பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய பிரதமராக செயற்பட்ட மஹிந்த ராஜபக்ச உட்பட குழுவினர் பகிரங்கமாக தாமரை மொட்டு சின்னத்திலான பொதுஜன பெரமுன கட்சியில் உறுப்புரிமை பெற்றுக் கொண்டனர்.

எனினும் குறித்த உறுப்பினர்களுக்கு நீதிமன்றம் சென்று உறுப்புரிமையை பாதுகாத்து கொள்வதற்கு ஒரு மாத கால அவகாசம் காணப்பட்டது.

அவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என்றால், இன்றைய தினத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்புரிமை இரத்தாகிவிடும் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அரசியலமைப்பை வாசித்து பார்க்குமாறு அழைப்பு விடும் அவர், அவ்வாறு அதனை வாசித்து பார்த்தால் உறுப்புரிமை இரத்தாகும் என்பது தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் போட்டியிட்டு, நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவான மஹிந்த, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

அவரது சர்ச்சைக்குரிய நியமனம் இன்று நாட்டில் பாரிய அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.