படுதோல்வியை முதன்முறையாக ஏற்றுக்கொண்ட மஹிந்த!

Report Print Vethu Vethu in அரசியல்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கு 113 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லை என்பதனை ஏற்றுக் கொள்வதாக மஹிந்த தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

பொதுஜன பெரமுன வெலிகம ஆசனத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அலகபெரும இதனை குறிப்பிட்டுள்ளார்.

தங்களுக்கு 113 ஆனசங்கள் இல்லை என்பதனை ஏற்றுக்கொள்கின்றோம். எனினும் ஐக்கிய தேசிய கட்சிக்கு 101 பேர் மாத்திரமே உள்ளனர்.

மஹிந்தவு ராஜபக்சவுக்கு 113 பேர் இல்லை என சபாநாயகர் கூறுகின்றார். எங்களுக்கு 113 இல்லை என ஏற்றுக்கொள்கின்றோம். ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவாக 122 பேர் கையொப்பமிட்டுள்ளனர்.

எனினும் அதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் 15 உறுப்பினரும், மக்கள் விடுதலை முன்னணியின் பேரும் இணைந்துள்ளனர். ரணிலுக்கு 101 பேர் மாத்திரமே உள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தத் தோல்வியை மஹிந்த ராஜபக்ஷவும் ஏற்றுக் கொண்டுள்ளதாக டளஸ் அழகப்பெரும மேலும் தெரிவித்துள்ளார்.