மைத்திரிக்கு தொடரும் சிக்கல்! இன்றும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு

Report Print Jeslin Jeslin in அரசியல்

நாடாளுமன்ற கலைப்பு தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை துரிதமாக வழங்குமாறு ஜனாதிபதி கேட்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், குறித்த நீதிமன்றத் தீர்ப்பு நிதானமாக வழங்கப்பட வேண்டும் என சட்டத்தரணி அருண லக்சிறி இன்றைய தினம் உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றை முன்வைத்துள்ளார்.

இவ்வாறு தீர்ப்பினை விரைவில் வழங்குமாறு அவசரப்படுத்துவது தீர்ப்புக்கு ஒரு பாதகத்தை ஏற்படுத்தும் என்பதால் அந்த கோரிக்கையை ஏற்காமல் தீர்ப்பு மிகவும் நிதானமாக வழங்கப்பட வேண்டும் என சட்டத்தரணி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாடாளுமன்ற கலைப்புக்கு எதிரான வழக்கின் தீர்ப்பை தாமதிக்காது வழங்குமாறு ஜனாதிபதி, சட்ட மா அதிபர் ஊடாக பிரதம நீதியரசரிடம் இன்றைய தினம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஏலவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.