மைத்திரியின் மற்றுமொரு அதிரடி நடவடிக்கை! நள்ளிரவில் வெளிவரவுள்ள அறிவிப்பு

Report Print Jeslin Jeslin in அரசியல்

மீண்டும் ஒரு விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று இரவுக்குப் பின்னர் வெளியிடப்படலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

அது சர்வசன வாக்கெடுப்பு குறித்தோ அல்லது, நாடாளுமன்ற அமர்வு இடைநிறுத்தம் தொடர்பானதாகவோ இருக்கலாம் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், நாடாளுமன்றத்தை கலைக்கும் வர்த்தமானி அறிவித்தல் அரசமைப்பிற்கு முரணானது என நீதிமன்றம் தீர்ப்பளித்தால் நாடாளுமன்ற தேர்தல்கள் இடம்பெறவேண்டுமா என்பது குறித்த சர்வசன வாக்கெடுப்பிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுப்பார் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவிப்பு குறித்து நீதிமன்றம் இந்த வாரம் தனது தீர்ப்பை வெளியிடவுள்ள நிலையிலேயே ஜனாதிபதியின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன

இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரியவுடன் முக்கிய பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார் எனவும் எனினும் இந்த பேச்சுவார்த்தைகள் குறித்த விபரங்கள் எவையும் வெளியாகவில்லை எனவும் கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல்கள் இடம்பெறவேண்டுமா என சர்வசன வாக்கெடுப்பை நடத்துவது குறித்து மைத்திரி தனது சட்ட ஆலோசகர்களுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.