சர்வதிகாரியாக செயற்படும் மைத்திரி! அரச ஊழியர்களுக்கு ஆபத்து

Report Print Vethu Vethu in அரசியல்

ஜனாதிபதியின் சர்வதிகார செயற்பாடு காரணமாக அரச ஊழியர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் பெரும் நெருக்கடி நிலை ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சட்டரீதியான அரசாங்கம் ஒன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படாமை காரணமாக இந்த நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

விரைவில் சட்டரீதியான அரசாங்கம் ஒன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்கவுள்ளதாக அந்த டுவிட்டர் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.