அனைத்திற்கும் விரைவில் முற்றுப்புள்ளி! களத்தில் இறங்கிய கரு ஜயசூரிய

Report Print Jeslin Jeslin in அரசியல்

நாடாளுமன்றில் அண்மைக்காலத்தில் இடம்பெற்றது போன்ற சீர்கேடான செயற்பாடுகள் இனி இடம்பெற இடமளிக்கப்போவதில்லை என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அசௌகரியம் ஏற்படும் வகையில் இடம்பெற்ற சகல நடவடிக்கைகளுக்கும்கூட விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மறைக்கல்வியினூடாக சிறுவர்கள் கற்றுக்கொள்ளும் நன்நடத்தைகளை போன்று நாட்டின் மீயுயர் நிறுவனமாகிய நாடாளுமன்றினூடாகவும் நன்நடத்தைக்களை சிறுவர்கள் கற்றுக்கொள்ள கூடிய சூழல் விரைவில் ஏற்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.