பரபரப்பான கட்டத்தில் கொழும்பு! மும்முனைகளில் இரகசிய சந்திப்புகள்

Report Print Vethu Vethu in அரசியல்

நாளைய தினம் மீண்டும் நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில், அரசியல் மட்டத்தில் முக்கிய சந்திப்புகள் இடம்பெறவுள்ளன.

ஜனாதிபதி, மஹிந்த தரப்பு, ரணில் குழுவினர் தனித்தனியாக சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையில் இன்று இரவு கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமை தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் மேற்கொள்ளப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்றைய தினம் ஜனாதிபதி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. அங்கும் சமகால அரசியல் நிலைமைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன.

ஜனாதிபதியுடன் இன்று இடம்பெறும் கலந்துரையாடலில் நாளைய தினம் இடம்பெறும் நாடாளுமன்ற கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சுமந்திர முன்னணி கலந்து கொள்வதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சி குழுவினர் இன்று இரவு அலரி மாளிகையில் கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளனர்.

நாளைய தினம் இடம்பெறும் நாடாளுமன்ற அமர்வு தொடர்பில் இங்கு கலந்துரையாடல் மேற்கொள்ளவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக நம்பிக்கை பிரேரணை ஒன்று நாளைய தினம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.