ஜனாதிபதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

Report Print Kamel Kamel in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ட்ரான்பெரன்ஸி இன்டர்நெசனல் என்ற அமைப்பு இந்த கோரிக்கையை எழுத்து மூலம் முன்வைத்துள்ளது.

ஆங்கில ஊடகம் ஒன்றுடன் அண்மையில் நடத்தப்பட்ட நேர்காணலின் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேரம் பேசப்பட்டமை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்து வெளியிட்டிருந்தார்.

கட்சி தாவல்களுக்காக பெருந்தொகைப் பணம் பேரம் பேசப்பட்டதாகவும் அந்த விலைகள் கட்டுப்படியாகாத காரணத்தினால் நாட்டில் இந்த நிலைமை ஏற்பட்டதாகவும் அவ்வாறு இல்லாவிட்டால் மஹிந்த பிரதமராக கடமைகளை தொடர்ந்திருப்பார் எனவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம் வழங்க முயற்சித்தமை தொடர்பில் ஜனாதிபதி அண்மையில் நேர்காணல் ஒன்றினை வழங்கியிருந்தார் எனவும் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1994ஆம் ஆண்டு 19ம் இலக்க லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுச் சட்டத்தின் அடிப்படையில் இந்த முறைப்பாடு குறித்து விசாரணை நடத்தும் பூரண அதிகாரம் ஆணைக்குழுவிற்கு உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுப்பதாகவும் நேர்காணல் குறித்த காணொளியொன்று இணைக்கப்பட்டுள்ளதாகவும் ட்ரான்பெரன்ஸி இன்டர்நெசனல் அமைப்பு கடிதத்தில் அறிவித்துள்ளது.