வீரவங்சவின் மனைவிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Report Print Steephen Steephen in அரசியல்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவி சஷி வீரவங்சவுக்கு எதிராக குற்றப் புலனாய்வுப்பிரிவு பொலிஸார் தாக்கல் செய்துள்ள வழக்கு எதிர்வரும் ஜனவரி 15ஆம் திகதி வரை ஒத்திவைத்து, கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. சஷி வீரவங்ச, நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை.

சந்தேக நபர் ஆஜராக முடியாமைக்கான காரணத்தை அடுத்த வழக்கு விசாரணையின் போது தெரியப்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் எதிர்வரும் ஜனவரி 15 ஆம் திகதி சாட்சியாளர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் நீதவான் எச்சரித்தார்.

போலியான தகவல்களை சமர்பித்து தவறான முறையில் ராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டதன் மூலம் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் தண்டனை பெறக்கூடிய குற்றத்தை செய்துள்ளதாக குற்றம் சுமத்தி, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளனர்.