நாட்டிற்கே முன்னுதாரணமாக விளங்கும் நாவிதன்வெளி பிரதேச சபை

Report Print Nesan Nesan in அரசியல்

பிரதேசத்தின் பிரதிநிதிகளாகிய பிரதேச சபை உறுப்பினர்கள் கட்சி, இன, மத பேதங்களை கடந்து இந்த நாட்டின் அரசியல் குழப்பகரமான நிலையிலும் வரவு செலவை ஆதரித்து அங்கீகரித்ததாக தவிசாளர் த.கலையரசன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச சபையின் 2019 ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இன்று இந்த வருடத்திற்கான இறுதி கூட்டத்தொடரில் சபையின் உறுப்பினர்களினால் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இதன் போது கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாவிதன்வெளி பிரதேச சபையின் 10ஆவது கூட்டத்தொடரின் அமர்வின் போது பிரேரணைகள் மனுக்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இதன்போது காரசாரமான விவாதங்களும் இடம்பெற்றன.

வருமானம் குறைந்த பிரதேச சபைகளுள் அம்பாரை மாவட்டத்தில் நாவிதன்வெளி பிரதேச சபை விளங்கினாலும் இந்த பிரதேசத்தில் மூவின மக்கள் வாழ்கின்றனர்.

இது குறித்து அவர் மேலும் கருத்து கூறுகையில்,

இலங்கை தீவில் நாவிதன்வெளி பிரதேச சபை போல ஒற்றுமையான ஒரு அரசாங்கம் காணமுடியாது. இது போன்ற ஒற்றுமை நாட்டின் அரசியல் தலைமைகளிடம் காணப்பட வேண்டும்.

அபிவிருத்தியாக இருந்தாலும் சரி ஏனைய விடயங்களாக இருந்தாலும் ஒற்றுமையுடன் கூடி நெகிழ்வுத்தன்மையுடன் முடிவெடுப்பதே ஒற்றுமைக்கு காரணமென கூறினார்.

இதன்போது எதிர்வரும் ஆண்டு பிரதேச சபையின் வருமானத்தை அதிகரிப்பதற்கான முன்மொழிவுகளும் சக உறுப்பினர்களால் முன்மொழியப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.