நெருக்கடியான நேரத்தில் சம்பந்தனுக்கு ரெலோ அவசர கடிதம்!

Report Print Nivetha in அரசியல்

ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகம் ந.ஸ்ரீகாந்தாவினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிற்கு அவசர கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நெருக்கடியான அரசியல் சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஐக்கிய தேசியக் கட்சியும் முக்கிய சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ள நிலையில் இந்த கடிதம் இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கும் போது விதிக்கப்பட வேண்டிய நிபந்தனைகள் தொடர்பிலும் ந.ஸ்ரீகாந்தா தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் கைதிகளின் விடுதலை, பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல், 13வது திருத்தத்தை நடைமுறைப் படுத்துவதற்குரிய அழுத்தத்தினை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கும் போது நிபந்தனைகளாக விதிக்க வேண்டும் என்றும் அந்த அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.