ரணில் செய்த திருட்டுத் தனங்களை அம்பலப்படுத்தாமல் விடமாட்டேன்! மைத்திரி அதிரடி

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க செய்த திருட்டுத்தனங்களை அம்பலப்படுத்தாமல் விடமாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி தலைமையில் இன்று இரவு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அக்கட்சியினை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்களின்படி,

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாளை காலை உயர்நீதிமன்றம் செல்ல தீர்மானத்துள்ளனர். நாளை நாடாளுமன்றம் செல்லவோ அல்லது கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கோ செல்வதில்லையென்று ஏகமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

இதேவேளை, ரணில் விக்ரமசிங்க செய்த திருட்டுத்தனங்களை அம்பலப்படுத்தாமல் விடமாட்டேன் என்றும் அதற்காக விசேட ஆணைக்குழு ஒன்றை நிறுவவுள்ளேன் என்றும் ஜனாதிபதி மைத்திரி இக் கூட்டத்தில் தெரிவித்தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இச் சந்திப்பில் நடந்த பேச்சுக்கள் தொடர்பான தகவல்கள் எவையும் அக்கட்சி சார்பில் இன்னமும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.