பண்டுவஸ்நுவர பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் ஆறு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

Report Print Mubarak in அரசியல்

அனுராதபுரம் மாவட்டத்தின் பண்டுவஸ்நுவர பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் ஆறு மேலதிக வாக்குகளால் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிரதேச சபைத்தலைவர் சுனில் ஜயவீரவின் தலைமையில் வரவு செலவுத் திட்ட விவாதம் இடம்பெற்றுள்ளது.

இதன்படி பத்தொன்பது வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாகவும், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த பதினொரு பேருடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் ஒருவரும், மக்கள் விடுதலை முண்ணனி உறுப்பினர் ஒருவரும் எதிராக வாக்களித்தனர்.

வாக்களிப்பு நடைபெறும் போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஆறு உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

இதன் அடிப்படையில் பண்டுவஸ்நுவர பிரதேச சபையின் 2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் ஆறு மேலதிக வாக்குகளால் நிறைவேறியது.