ரணிலின் பிரதமர் கனவுக்கு மகிந்த தரப்பு வைத்துள்ள செக்!

Report Print Murali Murali in அரசியல்

நாடாளுமன்றில் நம்பிக்கை பிரேரணை கொண்டு வந்து வெற்றிபெற்றாலும் ரணில் விக்ரமசிங்க பிரதமராக முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்க வேண்டும் என கோரி ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் நாளை நாடாளுமன்றில் நம்பிக்கை பிரேரணை ஒன்று கொண்டு வரப்படவுள்ளது.

இந்நிலையிலேயே, உதய கம்மன்பில இவ்வாறு கூறியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,

“நாடாளுமன்றத்தில் இரகசிய வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் தீர்மானத்தை நிறைவேற்றி, ரணிலை பிரதமராக நியமிக்குமாறு உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றைத் தாக்கல் செய்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்டுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், புதிய பிரதமரை நியமிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கும் தேவை உச்ச நீதிமன்றுக்கு கிடையாது. ஏனெனில் தற்போது பிரதமர் ஒருவர் இருக்கினறார்.

மகிந்த ராஜபக்ச பிரதமராக செயற்படுவதற்கு மாத்திரமே நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. எனினும், இந்த இடைக்கால் தடை உத்தரவு மகிந்தமை பதவியிலிருந்து நீக்கியதாக பலர் கருதுகின்றனர்.

இந்நிலையில், ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக நம்பிக்கை பிரேரணை நிறைவேற்றப்பட்டால் கூட அவரை பிரதமராக நியமிக்க முடியாது” என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில மேலும் கூறியுள்ளார்.

Latest Offers