இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி! கனடா மீது கடும் அதிருப்தியில் தமிழர்கள்

Report Print Dias Dias in அரசியல்

இலங்கையில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற நிலைமை தொடர்பாக கனேடிய பிரதமர் Trudeau வின் அரசாங்கம் கவனத்தில் கொள்ளாது இருப்பது குறித்து கனடா வாழ் தமிழ்ச் சமூகம் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

தெற்காசியாவிற்கு வெளியில் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் சமூகம் கனடாவில் வசித்து வருகிறது.

தமது தாயகமான இலங்கையின் மனித உரிமை பிரச்சினைகள் தொடர்பில் கடந்த மூன்று தசாப்தங்களாக, கனடாவில் தமிழ்ச் சமூகம் சர்வதேச மேடைகளில் வெளி கொண்டு வந்ததுள்ளது.

தமிழ் பிரிவினைவாத போராளிகளுக்கும் சிங்கள பெரும்பான்மை அரச படைகளுக்கும் இடையில் 30 ஆண்டுகளாக நடந்து வந்த இரத்த களறியான போரை மகிந்த ராஜபக்ச தலைமையிலான பெரும்பான்மை சிங்கள அரசாங்கம், கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு கொண்டு வந்தது.

நடந்த இந்த போரில் மகிந்த ராஜபக்ச, பொதுமக்களை பாதுகாக்க தவறியதாக மனித உரிமை குழுக்கள் மற்றும் மனிதாபிமான உதவி அமைப்புகள் குற்றம் சுமத்தியுள்ளன.

இறுதிக்கட்டப் பேரில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக அறிக்கைகள் கூறுகின்றன.

ராஜபக்ச அரசாங்கம், ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதுடன் அரசியல் எதிரிகளை படுகொலை செய்ததுடன் நீதிக்கு புறம்பான கொலைகள் மற்றும் வலிந்து காணாமல் போக செய்யும் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்படுகிறது.

இந்த நிலையில், மகிந்த ராஜபக்சவின் அமைச்சரவையில் அங்கம் வகித்த மைத்திரிபால சிறிசேன கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை தோற்கடித்திருந்தார்.

இதன் பின்னர், நாட்டில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறல் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்ற சிறிய நம்பிக்கை ஒளி தென்பட்டது.

எனினும் கடந்த மூன்று ஆண்டுகளாக ஜனாதிபதி சிறிசேன, சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்புகளுக்கு அர்த்தமுள்ள ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை வழங்கவில்லை என குற்றம் சுமத்தப்படுகிறது.

எவ்வாறாயினும் போர் பின்னர், கடந்த மூன்று ஆண்டுகளில் இலங்கையில் இயல்பு நிலை தென்பட ஆரம்பித்தது. காணாமல் போகும் சம்பவங்கள் குறைந்தன.

எனினும் ஏற்கனவே காணாமல் போன சம்பவங்கள் தொடர்பான பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை.

இவ்வாறான நிலையில், சிறிசேன கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி பதவியில் இருந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நீக்கி விட்டு, மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தார்.

இதனையடுத்து நாட்டில் அரசியல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. ராஜபக்சவின் நியமனம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் கூறுவது, நியமனத்தை சவாலுக்கு உட்படுத்தியுள்ளனர்.

பெருமளவில் சுற்றுலாத்துறையில் தங்கி வாழும் இலங்கைக்கு பயணம் செய்வது தொடர்பில் கனடா உட்பட பல நாடுகள் பயண எச்சரிக்கை விடுத்துள்ளன.

அத்துடன் இலங்கையில் அமைதியின்மை காணப்படுவதாக இந்த நாடுகள் எச்சரித்துள்ளன. மகிந்த ராஜபக்சவின் மீள் வருகையானது இலங்கையில் மீண்டும் பலவந்தமாக காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் மற்றும் சட்டவிரோத கொலைகள் நடப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன.

அதேவேளை இலங்கையில் இறுதிக்கட்டப் போரில் நடந்த கொடூரங்களுக்கு இலங்கை அரசு பொறுப்புக் கூற வேண்டும் என கனேடிய லிபரல் அரசாங்கம் கூறியது.

இவ்வாறான நிலைமையில் இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் ரீதியான நிச்சயமற்ற நிலைமை தொடர்பில் Trudeauவின் லிபரல் அரசாங்கம் கவனத்தில் கொள்ளாது இருப்பது கனடா வாழ் தமிழ் சமூகத்திற்கு மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு இங்கே அழுத்தவும்...