மைத்திரியுடன் இன்றிரவு பேசியது என்ன? நாமல் வெளியிட்ட தகவல்

Report Print Murali Murali in அரசியல்

புதிய கூட்டணி அமைப்பது குறித்து இன்றைய கலந்துரையாடலின் போது பேசப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி இன்று இரவு சந்தித்து பேசியிருந்தார். இந்த கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

கலந்துரையாடல் நிறைவுபெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இவ்வாறு கூறியுள்ளார்.

“புதிய கூட்டணி அமைப்பது குறித்து இன்றைய கலந்துரையாடலில் பேசவில்லை. கட்சி தலைவர்கள் அது தொடர்பில் கலந்துரையாடி முழுமையான கூட்மைப்பு ஒன்றை ஏற்படுத்தி வருகின்றனர்.

புதிதாக கலந்துரையாட வேண்டியதில்லை. ஏகமானதான அரசியல் கூட்டணியாக நாம் அடுத்த தேர்தலில் போட்டியிடுவோம்” என அவர் மேலும் கூறியுள்ளார்.