மஹிந்தவிற்கு பறிபோன பிரதமர் பதவி இன்று கிடைக்குமா?

Report Print Vethu Vethu in அரசியல்

மஹிந்த ராஜபக்சவுக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டமை மற்றும் 49 பேருக்கு அமைச்சரவை அமைச்சர் பதவி வழங்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று உயர் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படவுள்ளது.

மஹிந்த ராஜபக்சவின் பிரதமர் பதவி உட்பட அமைச்சரவையை தடை செய்வதற்கு கடந்த 3ஆம் திகதி உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

அதற்கமைய மனு விசாரிப்பதற்காக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ப்ரீத்தி பத்மநாதன் சூரசேன மற்றும் அர்ஜுன் ஒபேசேகரவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மனு தொடர்பில் இன்று நீதிமன்றத்தில் தகவல் வழங்குமாறு பிரதிவாதிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த மனுவை ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 122 உறுப்பினர்களினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மற்றும் அமைச்சரவையின் செயற்பாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடை இந்த மனு விசாரணை நிறைவடையும் வரை நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers