இன்று மீண்டும் கூடும் நாடாளுமன்றம்! மஹிந்த தரப்பின் தீர்மானம்

Report Print Vethu Vethu in அரசியல்

ஜனாதிபதியினுடனான கலந்துரையாடலின் பின்னர் நாடாளுமன்றத்தை புரக்கணிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்ப

நாட்டில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இன்று ஒரு மணியளவில் மீண்டும் நாடாளுமன்றம் கூடவுள்ளது.

இன்றைய அமர்வினையும் புறக்கணிக்கப் போவதாக மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிவு எடுத்துள்ளனர்.

நாடாளுமன்ற கூட்டம் மற்றும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இடம்பெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமகால அரசியல் நெருக்கடி தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்கின் தீர்ப்பு கிடைக்கும் வரையில் எந்தவொரு நடவடிக்கைகள் ஒன்றும் மேற்கொள்ளப்படாதென அவர் கூறியுள்ளார்.

இதேவேளை இன்றைய தினம் ரணிலை மீண்டும் பிரதமராக நியமிப்பதற்காக நம்பிக்கை பிரேரணை ஒன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

கடந்த மூன்று நாடாளுமன்ற அமர்வுகளை மஹிந்த தலைமையிலான குழுவினர் புறக்கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.