இலங்கை தமிழ் அரசியல்வாதியொருவர் விடுத்துள்ள அறிவிப்பு

Report Print Ajith Ajith in அரசியல்

கடந்த ஒருவார காலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரான தமிழ் அரசியல்வாதி ஆறுமுகன் தொண்டமான் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துடன் பேசி இணக்கமொன்றுக்கு வரும் வரையில் வேலை நிறுத்த போராட்டத்தை கைவிடுமாறு ஜனாதிபதி கேட்டுக் கொண்டதற்கு அமைய தொழிலாளர்களின் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்படுவதாக தொண்டமான் அறிவித்துள்ளார்.

எனினும் இந்த அறிவிப்பு தொடர்பில் கூட்டு உடன்படிக்கையில் கைச்சாத்திடாத தொழிற்சங்கங்களின் கருத்துக்கள் இன்னும் வெளியாகவில்லை.

இதற்கிடையில் தொழிற்சங்கங்களுடன் இனி பேசப்போவதில்லை என்று முதலாளிமார் சம்மேளனம் நேற்று அறிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.