அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இன்று பிற்பகல் நாடாளுமன்றம் கூடும் போது ரணிலுக்கு ஆதரவாக பிரேரணை ஒன்று கொண்டு வரப்படவுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவினால் இந்த பிரேரணை கொண்டு வரப்படவுள்ளது.
இன்றைய தினம் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதாக இல்லையா என்பது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இறுதி நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ரணிலுக்கு ஆதரவான பிரேரணைக்கு ஆதரவு வழங்க வேண்டாம் என, எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தனிடம் ஜனாதிபதி கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று கொண்டு வரப்படும் பிரேரணைக்கு ஆதரவு வழங்காமல் நடுநிலை வகிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் பங்காளி கட்சியாக செயற்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எவ்வாறான முடிவினை எடுக்கும் என விரைவில் அறிவிக்கப்படும் என்று நாடாமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.