ஏழு நாட்களில் முடியாமல் போனமைக்கு காரணம் என்ன? மைத்திரி விளக்கம்

Report Print Vethu Vethu in அரசியல்

நாட்டில் தற்போது நிலவும் அரசியல் நெருக்கடிக்கு ஒரு வாரத்தில் தீர்வு வழங்க முடியாமல் போயுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தாமதம் அடைந்துள்ளமையால், சொன்னபடி தீர்வு வழங்க முடியவில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களின் பங்கேற்புடன் நேற்று இரவு இடம்பெற்ற விசேட கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் நெருக்கடியை தீர்ப்பதற்கு மேற்கொள்ள கூடிய நடவடிக்கை தொடர்பில் அங்கு கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசு தேவ நாணயக்கார் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் நாடாளுமன்றம் மற்றும் கட்சி கூட்டத்தை இரத்து செய்வதற்கு புறக்கணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கயை ஒரு வார காலத்தில் தீர்த்து வைப்பதாக ஜனாதிபதி உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.