இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் சற்று நேரத்தில் சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.
குறித்த சந்திப்பு இன்று காலை 8.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக இன்று மதியம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ள நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவசரமாக கூட்டமைப்பை சந்திப்பதற்கு அழைப்பு விடுத்துள்ளார்.