ரணிலை மீண்டும் பிரதமராக்க? மைத்திரி - மஹிந்த அணியின் கட்டுக்கதை

Report Print Rakesh in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டுமல்ல, எவர் தடைகள் ஏற்படுத்தினாலும் அவற்றை தகர்த்தெறிந்து ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக்குவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் ரணிலுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்துடன் தீர்மானத்தை நிறைவேற்றுவோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய ஊடகமொன்றிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,

ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக்க சர்வதேச சமூகம் களத்தில் இறங்கியுள்ளது என மைத்திரி - மஹிந்த அணியினர் கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டுள்ளனர்.

சர்வதேச சமூகத்தின் மனதை வெல்ல தெரியாது நாட்டு மக்களை வதைத்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு 2015ஆம் ஆண்டு நாங்கள் முடிவு கட்டிவிட்டோம்.

மீண்டும் அந்த ஆட்சி இந்த நாட்டில் அரங்கேற நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். அதை ஜனாதிபதி மைத்திரிக்கு பல தடவைகள் நாம் புரியவைத்துள்ளோம்.

நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இதற்குச் சான்றாக உள்ளன என குறிப்பிட்டுள்ளார்.