சமகால அதிர்வுகளால் கலங்கி போயுள்ள மஹிந்த! பதவியை கைவிட்டுச் செல்ல தீர்மானம்

Report Print Vethu Vethu in அரசியல்

சமகாலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக தனது பிரதமர் பதவியை தக்க வைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டுள்ளார்.

இதன் காரணமாக எதிர்க்கட்சி தலைவராக நாடாளுமன்றத்தில் செயற்படுவதற்கு தான் தயார் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைவர்களிடம் மஹிந்த இதனை தெரிவித்துள்ளார் என கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் அந்த தீர்மானத்திற்கு விமல் வீரவன்ச மற்றும் திலங்க சுமத்திபால கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ள போதிலும், மஹிந்தவின் தீர்மானத்தை பசில் ராஜபக்ஷ வரவேற்றுள்ளார்.

நாடு தற்போது பாரிய நெருக்கடிக்குள்ளாகியுள்ள நிலையில், நாட்டை நடத்திச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் நிராகரிப்பிற்குள்ளாக நேரிடும் என பசில் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கமைய 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முடியாமல் போய் விடும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக பிரதமர் பதவிக்காக போராடும் மனநிலையை கைவிட்டுள்ளார் என கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.