மஹிந்தவை பிரதமராக நியமித்தமை மற்றும் அமைச்சரவை அமைசர்களுக்கு எதிரான இடைக்கால தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்று மேன் முறையீட்டு நீதிமன்றில் விசாரணை எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அடுத்த வருடம் ஜனவரி மாதம் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கினை எதிர்வரும் ஜனவரி மாதம் 16, 17, மற்றும் 18ஆம் திகதிகளுக்கு பிற்போடப்பட்டுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதேவேளை மஹிந்த ராஜபக்சவினால் கடந்த 3ஆம் திகதி நீதிமன்றத்தில் மஹிந்தவின் பிரதமர் பதவிக்கு எதிராக விதிக்கப்பட்ட இடைக்கால தடைக்கு எதிர்ப்பு வெளியிட்டு தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த மனுவின் பிரதிவாதிகளாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உட்பட 122 உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.
மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக செயற்படவும் அமைச்சரவை அமைச்சர்கள் 49 பேருக்கு எதிராகவும் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் 14ம் திகதி முதல் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 7ம் திகதி வரை நீதிபதிகளுக்கான வருடாந்த விடுமுறை வழங்கப்படவுள்ளது.
இந்நிலையில் அடுத்த வரும் இரு தினங்களில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.