ஜனாதிபதியை சந்தித்த கூட்டமைப்பு! இரகசிய பேச்சுவார்த்தை குறித்து கசிந்துள்ள தகவல்

Report Print Ajith Ajith in அரசியல்

ஜனாதிபதியின் மற்றுமொரு கோரிக்கையையும் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறுதலித்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் கூட்டமைப்பினர் இன்று காலை ஜனாதிபதியை சந்தித்திருந்தனர்.

ஆர்.சம்பந்தன், மாவை சேனாதிராஜா மற்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரே ஜனாதிபதியை சந்தித்தனர்.

இன்று நாடாளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக நம்பிக்கையை வெளியிடும் பிரேரணை கொண்டு வரப்படும் போது அதில் வாக்களிக்க வேண்டாம் என ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.

எனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கும் வகையிலான எந்த நடவடிக்கையையும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்று கூறி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஜனாதிபதியின் கோரிக்கையை நிராகரித்துள்ளனர்.

இதனை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி, எதிர்காலத்தில் சந்திப்போம் என்று கூறிவிட்டு அவர்களை வழியனுப்பி வைத்துள்ளார்.