மீண்டும் ரணில் பிரதமராகின்றார்? வெள்ளிக்கிழமை பதவியேற்பு

Report Print Murali Murali in அரசியல்

உயர் நீதிமன்றின் தீர்ப்பு வெளியானவுடன் முக்கிய அரசியல் மாற்றங்கள் இடம்பெறும் எனவும் குறிப்பாக ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக நியமிக்கப்படவுள்ளதாகவும் அந்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

எனினும், இது குறித்த அதிகாரபூர்வமான தகவல்கள் எவையும் வெளியாகவில்லை. கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க நீக்கப்பட்டார்.

இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்த ஜனாதிபதி, நாடாளுமன்றத்தையும் கலைத்து பொது தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார்.இதனால் கொழும்பு அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில், ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய தேசிய முன்னணி உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்தது.இந்த மனு ஏழு பேர் அடங்கிய நீதியர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டு, மனு மீதான தீர்ப்பு வெளியாகவுள்ளது.

இந்நிலையிலேயே, உயர்நீதிமன்றின் தீர்ப்பு வெளியானதும் முக்கிய சில அரசியல் மாற்றங்கள் ஏற்படலாம் எனவும், ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமாராக நியமிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.