தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சித் தலைமைப் பதவியை வகிக்க தகுதியற்றது

Report Print Kamel Kamel in அரசியல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சித் தலைமைப் பதவியை வகிக்க தகுதியற்றது என மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு நம்பிக்கை தெரிவிக்கும் நாடாளுமன்ற பிரேரணைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளித்தால், சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிக்கத் தகுதியற்றவராகின்றார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வு சட்டவிரோதமானது, நகைப்பிற்குரியதுமாகும்.

நேற்று நாள் முழுவதும் ஐக்கிய தேசியக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவினை பெற்றுக்கொள்ள முயற்சித்திருந்தது.

நிபந்தனை அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிப்பதாக சித்தார்த்தன் கூறியிருந்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைப்பதில் எமக்கு பிரச்சினையில்லை.

எனினும், பிரேரணைக்கு ஆதரவளித்தால் எதிர்க்கட்சி தலைவர் பதவியை வகிக்க தகுதி கிடையாது என டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.