ரணிலின் வெற்றி உறுதி! மைத்திரிக்கு பறந்த செய்தி

Report Print Jeslin Jeslin in அரசியல்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மீது நாடாளுமன்றில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை பிரேரணை வெற்றிபெற்றது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க மீதான நம்பிக்கை பிரேரணை உரிய முறையில் நிறைவேற்றப்பட்டதாக அவர் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் இன்றைய தினம் பகல் 1 மணிக்கு கூடிய போது ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மீது நம்பிக்கை பிரேரணை ஒன்றை கொண்டுவந்திருந்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன், 117 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவினைப் பெற்று குறித்த பிரேரணை வெற்றிப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers