இது சட்டவிரோத நாடாளுமன்றம்! மீண்டும் முரண்டு பிடிக்கும் மகிந்த தரப்பு

Report Print Jeslin Jeslin in அரசியல்

ரணில் மீதான நம்பிக்கை பிரேரணை தீர்மானத்தை நிராகரிப்பதகாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.

இது சட்டபூர்வமற்ற நாடாளுமன்றம். இதனை ஏற்க மாட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் இன்றைய தினம் பகல் 1 மணிக்கு கூடிய போது ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மீது நம்பிக்கை பிரேரணை ஒன்றை கொண்டுவந்திருந்தார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன், 117 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவினைப் பெற்று குறித்த பிரேரணை வெற்றிப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers