பெரும்பான்மை ஆதரவு மகிந்தவுக்கே!

Report Print Steephen Steephen in அரசியல்

நாட்டில் உள்ள 21 மில்லியன் மக்களின் 15 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களின் ஆதரவு மகிந்த ராஜபக்சவுக்கே இருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

பெரும்பான்மை யாரிடம் இருக்கின்றது என்பதை கண்டறிய தேர்தலுக்கு வருமாறு சவால் விடுக்கின்றேன். 21 மில்லியன் மக்களின் 15 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் மகிந்த ராஜபக்சவை நாட்டின் பிரதமராக நியமிக்க வேண்டும் என்று கூறுகின்றனர் எனவும் சந்திம வீரக்கொடி குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers